உத்தரப்பிரதேசத்தில் அரசு கட்டிடம் சரி செய்யப்படாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் ஊழியர்கள் ஹெல்மட் அணிந்து வேலை செய்து வருகின்றனர்.
மக்களுக்கு சேவை செய்வதே அரசின் பிரதான கடமை. அதற்காகவே அவர்களை நாம் வாக்கு அளித்து தேர்வு செய்கின்றேன். சொல்லப் போனால் அரசாங்கம் மக்களுக்கான வேலைக்காரன் என்றும் சொல்லலாம். ஆனால் தற்போது நிலைமை வேறு , மக்களுக்கு சேவை செய்யாமல் ஒவ்வொரு அரசும் மக்களை வஞ்சித்து வருகின்றனர். இதனால் தான் அங்கங்கே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்களுக்கு சேவை செய்யாதது ஒரு அரசா ? என்ற கேள்வியை முன்வைத்து வரும் நிலையில் பாஜக ஆளும் உத்திரபிரதேச மாநிலம் பாண்டாவில் அரசு மின்வாரிய அலுவலகம் தேவையான அடிப்படை வசதியை அம்மாநில அரசு செய்யாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மின்வாரிய அலுவலகம் எந்நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் பணிக்கு வரும் ஊழியர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்தபடியே பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு அரசு அலுவலகத்தின் கட்டிடத்தை முழுமையாக பராமரித்து அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத அரசா மக்களை காக்க போகின்றது என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.