முதியவரிடம் செல்போன் பறித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சண்முகபுரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ராஜேந்திரன் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் நாகர்கோவில் கீரிப்பாறை பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பதும் அவர் ராஜேந்திரனிடம் இருந்து செல்போனை பறித்து சென்றதும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்ததோடு செல்போனையும் பறிமுதல் செய்தனர்.