Categories
அரசியல்

ஓபிஎஸ், ஈபிஎஸ் சொல்லுவாங்க…! நான் சொன்னா சரியா இருக்காது- ஜெயக்குமார் பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எத்தனையோ சோதனைகளையும், இன்னல்களையும், துன்பங்களையும் தாங்கி வீர நடை போட்டு, வெற்றி நடை போட்டு மாபெரும் வெற்றிகளை பெற்று இருக்கின்றது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை  பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்  ஆரம்பிக்கும் போது பலர் ரத்தம் சிந்தி உருவாக்கினார்கள்.

புலாவரி சுகுமாரன், வத்தலகுண்டு ஆறுமுகம் இது போன்ற எண்ணற்ற சகோதரர்கள் தன்னுடைய ரத்தத்தை சிந்தி வளர்த்த இயக்கம். புரட்சித்தலைவர் இயக்கத்தை ஆரம்பிக்கும் போது எள்ளி நகையாடினார்கள், இந்த இயக்கம் புரட்சித்தலைவர் படம் போல நூறு  நாட்களுக்கு மேல் தாங்காது, அதோடு இந்த கட்சியும் மூடு விழா கொண்டாடி விடும் என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள்.

ஆனால் விமர்சனம் செய்தவர்களை எல்லாம் வீட்டிற்கு அனுப்பி நாட்டிற்கு எப்போதுமே தேவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொடி எங்கும் பறக்க வேண்டும் என்கின்ற வகையில்  பொன்மனச்செம்மல் மறைந்தாலும் ஒன்றரை கோடி தொண்டர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழ்கின்ற அத்தனை தமிழ் நெஞ்சங்களில் குடிகொண்டிருக்கின்றது இந்த இயக்கம்.

அதேபோல இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைந்தாலும் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்கள் மனதிலும் குடிகொண்டு தலைவர்களை  உருவாக்கி கட்டி காப்பாற்றிய இந்த மாபெரும் இயக்கம் பொன்விழா கண்டிருக்கின்றது. இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டு நெல்லையில்  அன்றைக்கு சிறப்பான முறையிலே கொண்டாடப்பட்டது.

எனவே அந்த வகையிள் இதையும் ஒரு எழுச்சியோடும், எப்படி எல்லாம் கொண்டாடப்பட வேண்டும் என்கின்ற கருத்து தலைமை கழக நிர்வாகிகள் மத்தியில் இருந்து பெறப்பட்டு, அதை எல்லாம் எப்படி எல்லாம் கொண்டாடப்பட வேண்டும் என்பது குறித்து தலைமை கழகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பார்கள்.

மிகப்பெரிய அளவிற்கு மக்களிடையே செல்வாக்குப் பெற்று இருக்கின்ற இந்த இயக்கம் பொன்விழா கண்டிருகின்ற வேளையில் இந்த விழாவை கொண்டாடுவதற்கு உரிய  கலந்துரையாடல் நடைபெற்றது.மாநாடு போன்ற நடைபெறப்போகிறதா இல்லை,  ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் எப்போதும் போல நடைபெறப் போகிறதா என்று செய்தியாளர் கேட்டதற்கு,

கருத்துக்கள் தலைமை கழக நிர்வாகிகள் இடத்திலே கேட்கப்பட்டது, எனவே கேட்கப்பட்ட கருத்தின் அடிப்படையில் நம்முடைய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அந்த கருத்தின் அடிப்படையிலே அறிவிப்புகளை வெளியிடுவார்கள். நான் சொல்வது சரியாக இருக்காது என ஜெயக்குமார் தெரிவித்தார்.

Categories

Tech |