Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் பலரும் வேலையை இழந்து தவிக்கின்றனர். அதன்படி தமிழகத்திலும் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது புதிதாக அமைந்துள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. தற்போதைய திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் ரூ.1200 கோடி முதலீட்டில் தனியார் பங்களிப்புடன் “பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்கா” தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சர், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் ஜெனரல் விகே சிங் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், தமிழகத்தில் அமையும் முதலாவது பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காவாக இது அமைந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 158 ஏக்கர் பரப்பளவில் 1700 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பூங்கா அமையும் பகுதி மிக மிக முக்கியமான தொழில் பகுதியாக உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் உள்ள 10 ஆயிரம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |