அரவிந்த்சாமி நடித்துள்ள மூன்று படங்கள் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழ் திரையுலகில் ரஜினி நடிப்பில் வெளியான தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. இதைத் தொடர்ந்து இவர் ரோஜா, பாம்பே போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இதன்பின் அரவிந்த்சாமியின் படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. இதனால் இவர் சினிமாவில் இருந்து விலகி தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்தார். இதன்பின் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார் . தற்போது இவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அரவிந்த் சாமி நடித்துவரும் வணங்காமுடி, புலனாய்வு, சதுரங்க வேட்டை ஆகிய படங்களை வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
அதாவது இந்த மூன்று படங்களிலும் சம்பள பாக்கி இருப்பதால் அரவிந்த் சாமி பாதி காட்சிகளில் மட்டுமே நடித்து முடித்துள்ளார். இதையடுத்து யார் படத்தில் நடிக்க வேண்டும் என்பதை அரவிந்த் சாமி முடிவு செய்யவில்லை. மேலும் இந்த 3 படத்தின் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் முதலில் தங்கள் படத்தில் நடித்துக் கொடுக்குமாறு அரவிந்த் சாமியிடம் கேட்டு வருகின்றனராம். இதனால் முதலில் யார் படத்தில் நடிக்க என தெரியாமல் அரவிந்த்சாமி தவித்து வருகிறார். தற்போது நரகாசூரன் படத்தில் ஒரு சில காட்சிகள் தான் அரவிந்த்சாமி நடிக்க வேண்டும். விரைவில் இந்த படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே நரகாசூரன் படத்தில் நடித்து முடித்த பிறகு அரவிந்த் சாமி மற்ற படங்களில் நடிக்க இருக்கிறாராம்.