Categories
அரசியல்

தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற…. மத்திய அமைச்சரிடம் எ.வ வேலு வைத்த கோரிக்கை…!!!

தமிழ்நாடு பொதுப் பணிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு  புதுடெல்லியில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய தேசிய நெடுஞ்சாலையை திட்டங்கள் மீது விவாதம் செய்தார் .இந்த விவாதத்தில் திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலை, வள்ளியூர்-திருச்செந்தூர் சாலை, கொல்லேக்கால்-கனூர் சாலை, பழனி-தாராபுரம் சாலை, ஆற்காடு-திண்டிவனம் சாலை, மேட்டுப்பாளையம்-பவானி சாலை, அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பவானி-கரூர் சாலைகளை  தேசிய நெடுஞ்சாலைகள் மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மதுரை மேற்கு சுற்றுவட்ட சாலை- கோயம்புத்தூர், கோயம்புத்தூர்- சத்தியமங்கலம் சாலை ஆகியவற்றிற்கான விரிவான திட்ட அறிக்கையை விரைவில் பணி தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த கோரிக்கைகள் தொடர்பாக ஒவ்வொன்றுக்கும் தனியாக கடிதங்களைக் கொடுத்து அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதற்கு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சரின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |