Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோவில்கள் திறப்பு…. அரசே முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளி,சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. கடந்த 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.கொரோனா தொற்றுப் பரவலைகட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

அதனால் மாநிலம் முழுவதும் பாஜக. இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அனுமதி வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தினர். ஆனால் கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளின்படி பொதுமக்கள் கூட்டம் கூட அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வரும் 15ஆம் தேதி விஜயதசமி தினத்தன்று கோவில்களில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று பொன்னுசாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கோவில்கள் 3 நாட்கள் கோவில்கள் அடைக்கப் படுவதாக கூறினார். அதன்பின்னர் விஜயதசமி தினத்தன்று கோவில்கள் திறப்பது பற்றி தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |