Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த விவசாயி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தூங்கிக்கொண்டிருந்த விவசாயி மீது லாரி ஏறி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கானூர் கிராமத்தில் அமலநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அரசு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் அடிப்பகுதியில் அமலநாதன் தூங்கிக்கொண்டு இருந்திருக்கிறார்.

இதனை அறியாத ஓட்டுநர் லாரியை நகர்த்தியுள்ளார். அப்போது லாரியின் அடியில் தூங்கிக்கொண்டிருந்த அமலநாதன் டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அமலநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |