அரசு பேருந்து மோதி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் கிராமத்தில் ராமானுஜம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நிர்மலா என்ற மனைவியும், வைபவ் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது அரசு பேருந்து அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமானுஜம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.