Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இன்னும் 2 மாதங்களில்…. அமைச்சர் புதிய அதிரடி அறிவிப்பு…!!!!

சென்னை டிபிஐ வளாகத்தில் வைத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழக்கமாக நடைபெறும் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கல்வி இயக்குனர் அறிவொளி, பள்ளி கல்வி துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதி தொடக்கப்பள்ளி திறப்பது குறித்தும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில் , மாதந்தோறும் வழக்கமாக நடைபெறும் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வரின் உத்தரவுபடி நவம்பர் 1-ஆம் தேதியிலிருந்து தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தைரியம் அளிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நவம்பர் 1ஆம் தேதி திறக்கப்படும் 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி செயல்படும் ஆனால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாது. மேலும் பொது தேர்வை எதிர்கொள்வதற்கான டிசம்பர் மாதத்தில் ஒரு தேர்வு மாணவர்களுக்கு நடைபெறும். அதன்பிறகு மார்ச் மாதத்தில் மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |