Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 35 லட்சம்…. அதிரடி சோதனையில் அதிகாரிகள்…. போலீஸ் விசாரணை….!!

வனத்தோட்டக் கழக அலுவலகத்தில் 35,00,000 ரூபாயை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள  வனத்தோட்டக்கழக அலுவலகம் திருச்சி செல்லும் வழியில் அமைந்து இருக்கிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு ஒப்பந்ததாரர்களிடமிருந்து பணம் வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான காவல்துறையினர் வனத்தோட்டக் கழக அலுவலகத்தில் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அலுவலகத்தின் அறையில் 500 மற்றும் 200 ரூபாய் பணக்கட்டுகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அதற்கான ஆவணம் எதுவும் இல்லாத காரணத்தினால் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கணக்கில் வராத பணம் பற்றி உதவியாளர்கள் மற்றும் வனத் தோட்டக் கலை அலுவலரிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |