வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இரண்டு மூன்று நாட்களில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே அரபிக்கடலில் அதி தீவிர புயலாக மாறி வரும் மஹா புயல் ஏழாம் தேதி அதிகாலை குஜராத்தில் போர்பந்தர் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.