தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனர் மிஸ்கின். இவர் தனித்துவமான கதைகளை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர். தற்போது ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கி முடித்து பின்னணி பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் நடிகர் வித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.