Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற மாபெரும் முகாம்…. மூன்று பேர் தேர்வு…. கலெக்டரின் செயல்….!!

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் மூன்று நபர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா  தடுப்பூசி முகாமில் மூன்று நபர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு எல்,இ,டி கலர் டிவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் மூன்று நபர்களை தேர்ந்தெடுக்க கணினி குலுக்கல் முறை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இதற்கு நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் மற்றும் வருவாய் அலுவலர் தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து குலுக்கல் முறையில் தமிழ்ச்செல்வி, பாப்பாத்தி மற்றும் பெருமாள் உள்பட 3 நபர்களுக்கு கலர் டிவி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |