Categories
அரசியல்

மக்கள் நிம்மதியா வாழ முடியல…. அரசு மீதான நம்பிக்கை சீர்குலைந்து விடும்…. வேல்முருகன்…!!!

தமிழகத்தில் பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் குறைந்து வந்த பெட்ரோல் டீசல் விலையானது தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி சமையல் எரிவாயு விலையானது ரூ1000 ரூபாயை தொட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவது அரசின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்து விடும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்கள் இருக்கிறது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து இது குறித்து பேச தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |