சென்னை பெரம்பூரில் தமிழக பாஜகவின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு பிரிவு, அனைத்து சிலம்பட்ட கூட்டணிகள் இணைந்து மாவட்ட அளவில் சிலம்பாட்டப் போட்டியினை நடத்தினர். இதில் சிலம்பாட்டத்தை கேலோ இந்திய திட்டத்தில் இணைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 100 சிலம்ப ஆசான்கள் முன்னிலையில் ஆயிரம் வீரர்கள் 2 லட்சம் முறை சிலம்பத்தை சுற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், கிராமப்புற கலைகளையும், நம் பாரம்பரிய விளையாட்டுகளையும் மேம்படுத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் ஒரே வயதுதான் என்று கூறியுள்ளார்.