தொடர் கனமழை காரணத்தினால் மழை நீர் கழிவு நீருடன் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்னூர் உள்பட இரண்டு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கழிவு நீருடன் கலந்து அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உள்ளது. அதன்பின் தாழ்வான பகுதிகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நின்றுள்ளது. இதனை அடுத்து அன்னை தெரசா விதி உள்பட பல தெருக்களில் வீட்டுக்குள் கழிவுநீர் புகுந்துள்ளது.
பின்னர் தண்ணீர் வீட்டிற்குள் புகுந்த காரணத்தினால் ஒருவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதனை அடுத்து அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தருமாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். மேலும் அவர் அளித்த உறுதி காரணத்தினால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.