Categories
அரசியல்

இப்ப என்ன உங்களுக்கு…. “1 ஓட்டு” எனக்கு கிடைத்த வெற்றி…. பாஜக வேட்பாளர் விளக்கம்…!!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் முன்னிலை வகித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தோல்வியடைந்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் பெரியபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அவருடைய குடும்பத்தில்  மட்டுமே ஐந்து ஓட்டுகள் உள்ள நிலையில் வெறும் 1 ஓட்டு பெற்று தோல்வியடைந்துள்ளார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைடுத்தடுத்து, “ஒத்த ஓட்டு பாஜக” என்று ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கார்த்தி, என்னுடைய குடும்ப சூழலால் வாக்குசேகரிப்பில் என்னால் சரிவர ஈடுபட முடியவில்லை. இதனால் தேர்தலில் நிற்பது வார்டு மக்களுக்கு தெரியாது. இருந்தாலும் எனக்கு ஒரு ஓட்டு கிடைத்துள்ளது அதை நான் வெற்றியாக எடுத்துக் கொள்கிறேன். மேலும் சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி கிண்டல் அடிப்பவர்கள் மீது கட்சி தலைமை இடத்தில் சொல்லி நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |