Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு…. புதிய அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் புதிய அதிரடி அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் நீண்ட நேரம் முக கவசம் அணிந்து வகுப்புகளில் தொடர்ச்சியாக அமர்வது என்பது கடினமான ஒரு சூழ் நிலையாக இருக்கும் என்பதால் பெற்றோர்கள் விரும்பினால் ஒரு மணி நேரத்தில் கூட பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்லலாம் என கூறியுள்ளது.

Categories

Tech |