நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் வழங்காமல் மின்சாரத்தை விற்பனை செய்யும் முயற்சியில் மாநில மின் வாரியங்கள் ஈடுபடக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால், ஒரு சில மாநிலங்களில் மின்தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதால் விரைவில் மின் தடை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் சில மாநில மின் வாரியங்கள் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை வழங்காமல் மின்சாரத்தை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனால் மின்சாரத்தை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தினமும் 4 மணி நேரம் வரை மின்வெட்டு அறிவிக்கப்பட்ட நிலையில் பிற மாநிலங்களிலும் நிலைமை மோசமாகலாம் எனவும் அரசு எச்சரித்துள்ளது.