இந்திய பொருளாதாரமானது 9.5 சதவீதம் வளர்ச்சியடையும் என சர்வதேச நிதியமானது கணக்கிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் இந்திய பொருளாதாரம் கடந்த வருடம் 7.3 சதவீத சரிவை சந்தித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீத வளர்ச்சிடையும் என சர்வதேச நிதியமானது கணித்துள்ளது. மேலும் அடுத்த நிதியாண்டில் இது 8.5 சதவீதமாக இருக்கும் என தெரிகிறது.
இதனையடுத்து பொருளாதார வல்லரசு நாடான சீனா நடப்பு நிதியாண்டில் 8 சதவீதம் பொருளாதார வளர்ச்சி காணும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அடுத்த நிதியாண்டில் 5.6 சதவீதம் பொருளாதார வளர்ச்சி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து உலக பொருளாதாரமானது நடப்பு நிதியாண்டில் 5.9 சதவீதம் மற்றும் அடுத்த நிதியாண்டில் 4.9 சதவீதமும் வளர்ச்சியடையும் என தெரியவந்துள்ளது.