தீவிரவாதத்தினை ஒடுக்குவதற்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பருவநிலை மாற்றம், கொரோனா பரவல் விவகாரம் போன்ற தீவிரவாதத்தினை ஒடுக்குவதற்கு சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து மத்திய ஆசிய நாடுகளுடனான உறவை மேலும் விரிவுபடுத்தும் வகையில் கிர்கிஸ்தான், ஆர்மீனியா மற்றும் கஜகஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் முதலாவது பயணமாக கிர்கிஸ்தான் சென்ற ஜெய்சங்கர் பின் நேற்று கஜகஸ்தான் சென்றார். அங்கு நடைபெற்ற 6-வது வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசியதாவது “சர்வதேச கொள்கைகளின் அடிப்படையில் ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும்.
அதன்பின் அமைதி, முன்னேற்றம் மட்டுமே நமது குறிக்கோளாக இருந்தால் தீவிரவாதத்தை எளிதில் வென்று விடலாம். ஆகவே தற்போதைய காலகட்டத்தில் தீவிரவாதத்தை மட்டுமே வைத்து கொண்டு ஒரு நாட்டை எதிர்கொள்ள முடியாது. இதில் எல்லை கடந்த தீவிரவாதம் ஒரு ஆட்சியின் சிறந்த கலை நுணுக்கம் அல்ல. அதுவும் தீவிரவாதத்தின் மற்றொரு முகமாக கருதப்படும். எனவே கொரோனா பரவல், பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்சனைகளில் நாட்டுக்கு நாடு உதவி செய்து ஒருங்கிணைந்து செயல்படுவது போன்று தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச நாடுகள் ஒன்று சேர வேண்டும்” என்று அவர் பேசியுள்ளார்.