நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நவம்பர் 19ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து திருப்பதிக்கு தினசரி விமானசேவை தொடங்கும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 4.20 மணிக்கு திருப்பதி விமான நிலையத்தை சென்றடையும். அதேபோல் திருப்பதி விமான நிலையத்தில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் விமானம் மதுரை விமான நிலையத்திற்கு 6.40 மணிக்கு வந்து சேருமென்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.