Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை…. பிரிட்டன் செய்த மிகப்பெரிய தவறு…. நாடாளுமன்ற குழு தகவல்….!!

கொரோனாவுக்கு எதிராக பிரிட்டன் அரசின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் மிகப்பெரிய தவறுகள் நடந்ததாக நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான பிரிட்டன் அரசின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் மிகப் பெரிய தவறுகள் நடைபெற்றதாக நாடாளுமன்றக் குழு விசாரணை மேற்கொண்டு தெரிவித்துள்ளது. ஆகவே அந்தத் தவறுகள் நடைபெறாமல் இருந்திருந்தால் பெரும்பாலான உயிரிழப்புகள் தவிர்த்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து “கொரோனா இன்று வரை கற்றுக்கொண்ட படிப்பினைகள்” என்ற தலைப்பில் சுகாதார மற்றும் சமூக நலன் தொடர்பான நாடாளுமன்ற குழு, அறிவியல் தொழில்நுட்பம் குழு கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதாவது “பிரிட்டனில் கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அவர்களது அறிவியல் ஆலோசகர்கள் பல்வேறு தவறுகளை செய்தனர். மேலும் உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் அவர்கள் தாமதப்படுத்தியதால் ஆயிரக்கணக்கானோர் கொரோனா பலிக்கு ஆளாகினர். மேலும் கொரோனாவுக்கு எதிரான பிரிட்டனின் நடவடிக்கைகளில் பல பெரிய சாதனைகளும், தவறுகளும் நடைபெற்றது. ஆகவே இனிவரும் காலங்களில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல பழைய சாதனைகளையும், தவறுகளையும் சரி செய்து பார்க்க வேண்டியது அவசியமானதாகும்.

இதனையடுத்து தென்கொரியா போன்ற நாடுகளில் கொரோனாவை தடுப்பதற்காக மிகத் துரிதமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. ஆனால் பிரிட்டனில் அந்த அறிவிப்பை வெளியிடுவதில் அரசு தாமதப்படுத்தியது. அதுமட்டுமின்றி போதிய அளவுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, தொற்று இருப்பவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்தை தவிர்த்து இருந்தால் ஆயிரக்கணக்கான கொரோனா உயிரிழப்புகளை தவிர்த்து இருக்க முடியும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |