Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வயதானவர்களிடம் மோசடி…. தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள்…. போலீஸ் விசாரணை…!!

வயதானவர்களை ஏமாற்றி பணம் மற்றும் நகை பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

சென்னை மாவட்டத்திலுள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது இரண்டு நபர்கள் அங்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து மூதாட்டி முக கவசம் அணியாததை சுட்டிக்காட்டி காவல்துறையினர் அபராதம் விதித்து விடுவார்கள் என்று அவரை முகக்கவசம் அணிய வைத்துள்ளனர். அதன்பிறகு மூதாட்டி அணிந்திருந்த 12 பவுன் நகைகளை நூதன முறையில் பறித்து விட்டு இரண்டு நபர்களும் அங்கிருந்து சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான கிருஷ்ணமூர்த்தி என்பவரிடமிருந்து மர்ம நபர் ஒருவர் ஏமாற்றி 10 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றுள்ளார்.

அதன் பின் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவகுமார் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வயதானவர்களின் கவனத்தை திசை திருப்பி நகை மற்றும் பணத்தை பறிக்கும் சம்பவம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது வயதானவர்களை தனியாக வெளியில் அனுப்ப வேண்டாம் எனவும், உறவினர்கள் யாராவது உடன் செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |