சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அதிகாரிகள் அகற்றிவிட்டனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள சர்வீஸ் சாலையில் உள்ள இடங்களை ஆக்கிரமித்து சிலர் கடைகள் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் பால தங்கதுரை தலைமையில் அதிகாரிகள் எண்ணூர் விரைவு சாலை சுங்க சாவடி முதல் எல்லை அம்மன் கோவில் தெரு வரை உள்ள பகுதிகளை ஆய்வு செய்துள்ளனர். அதன் பிறகு சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அதிகாரிகள் அகற்றிவிட்டனர்.