Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தல்: பெருன்பான்மையான இடங்களில்…. ஓங்கி நிற்கும் திமுக…!!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது நேற்று காலை முதல் தொடங்கி விடிய விடிய நடைபெற்றுவருகின்றது. இந்த தேர்தலானது வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றதால் வாக்கு எண்ணும் பணியானது பெரும்பான்மையான இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் கையே 9 மாவட்டங்களிலும் ஓங்கி  உள்ளது.

இதில் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்குமான வாக்கு வித்தியாசமானது அதிக அளவில் உள்ளது. மேலும் திமுக 9 மாவட்ட ஊராட்சிகளையும் கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பெரும்பாலானோர் திமுக கூட்டணியிலிருந்தே ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு ஆளும் கட்சியாக அதிமுக இருந்தபொழுது கூட நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே வாக்கு வித்தியாசமானது பெரிய அளவில் இல்லை. ஆனால் தற்போது நடைபெற்றுள்ள தேர்தலில் திமுக தான் அதிகமான ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Categories

Tech |