Categories
உலக செய்திகள்

தேங்கி கிடக்கும் கண்டெய்னர்கள்…. தடைபட்ட விநியோகம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பிரிட்டனின் பரபரப்பு துறைமுகமான  Felixstoweவில் கண்டெய்னர்கள் குவிந்து கிடப்பதால் சூப்பர் மார்க்கெட்டில் விநியோகமானது தடைபடும் சூழல் உருவாகியுள்ளது.

பிரிட்டன் Felixstowe துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் கண்டெய்னர்களினால் சூப்பர் மார்க்கெட்களில் விற்பனையானது தடைபட்டுள்ளது. இதனால் உணவு பண்டங்களின் தட்டுப்பாடு மட்டுமல்லாமல் பல்வேறு சிறு வணிகங்களும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது கனரக வாகனங்களை இயக்க ஓட்டுநர்கள் இல்லாததன் காரணமாகவே துறைமுகத்தில் சுமார் 10 நாட்களுக்கும் மேலாக கண்டெய்னர்கள் வெளியேற்றப்படாமல் உள்ளன.

Felixstowe துறைமுகத்திலிருந்து தான் பிரிட்டனுக்கு 40 சதவீதம் கண்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இந்தத் துறைமுகத்தில் இருந்து வெளியேற்றப்படும் கண்டெய்னர்களின் எண்ணிக்கையானது 15 முதல் 20 விழுக்காடு வரை குறைந்துள்ளது. ஆகவே துறைமுகத்தில் தற்பொழுது 7500 கண்டெய்னர்கள் வெளியேற்றப்படாமல் தேங்கி உள்ளன. இந்நிலையில் மிகப்பெரிய வணிக கப்பல் போக்குவரத்து நிறுவனமான Maersk, சில்லறை விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதில் தொடரும் தாமதம் காரணமாக எந்த பொருளை முன்னதாக அனுப்புவது என்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தைகைய ஓட்டுநர்களின் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பெரிய வணிக கப்பல்கள் வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களிடையே கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில், உணவு பொருட்கள், பரிசு பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

Categories

Tech |