கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
கால்நடைகளுக்கு உடல்நிலை சரியில்லாத பட்சத்தில் அவற்றுக்கு சாதாரண சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை மேற்கொள்ளக் கூடிய நவீன வசதிகள் கொண்ட அம்மா ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமைச் செயலக அதிகாரி சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்த இந்த ஆம்புலன்ஸ் சேவையானது கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய கால்நடைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பொழுது 1962 என்ற இலவச எண்ணை அழைத்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து கால்நடைக்கு சிகிச்சை அளிக்கவும் தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை அளிக்கவும் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 ஆம்புலன்ஸ்கள் தமிழகத்தில் இயங்கிவரும் நிலையில் இன்று கூடுதலாக 22 ஆம்புலன்ஸ்களைத் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் இந்த திட்டமானது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.