Categories
சென்னை மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு செம்ம ஹேப்பி நியூஸ்…. இரவு 12 மணி வரை….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் இன்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து மக்கள் வெளியூர் செல்வதால் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நெரிசல் மிகுந்த நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று மட்டும் இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் மெட்ரோ ரயில்நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முக கவசம் அணிந்து இருப்பதுடன் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |