Categories
தேசிய செய்திகள்

13 வருடம் டெல்லியில் வசித்து வந்த பாக். தீவிரவாதி… “யாருக்கும் தெரியாமல் இருந்தது எப்படி”…? போலீஸ் விசாரணை…!!!!

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி 13 வருடங்களாக டெல்லியில் வசித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதியான அஷ்ரப் என்பவர் சில போலி ஆவணங்களை பயன்படுத்தி 13 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வந்துள்ளான். அவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவனிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவன் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பயங்கரவாதி என்பதும், மேலும் அவன் வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான். மேலும் அஷ்ரப் ஜம்மு-காஷ்மீர் உட்பட பல இடங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது,

அஷ்ரப் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் யமுனா வங்கிக்கு அருகில் இருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கி, 60 ரைபில் ரவுண்டுகள், இரண்டு பிஸ்டல்கள் மற்றும் கையெறி குண்டுகள் போன்றவற்றை கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் மிகப் பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த பயங்கரவாதியான அஷரப் டெல்லியின் லட்சுமி நகரின் அருகில் உள்ள ரமேஷ் பார்க் பகுதியில் வசித்து வந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீதிமன்றம் ஆஷரபை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளது.

Categories

Tech |