கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ மருந்து நிறுவனம் “கோர்பேவேக்ஸ்” என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ மருந்து நிறுவனம் “கோர்பேவேக்ஸ்” என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. மேலும் ஏற்கனவே கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு உள்ளிட்ட இரண்டு தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு 2 டோஸ் போட்டு கொண்டவர்களுக்கு மூன்றாவது பூஸ்டர் டோஸாக “கோர்பேவேக்ஸ்” பரிந்துரைக்கப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் 18 முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம். இதற்கிடையே பயாலஜிக்கல்-இ மருந்து நிறுவனம், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை நடத்துவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது.
ஏறக்குறைய பெரும்பாலானோர் தற்போது 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ள நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி பலரது உடலிலும் குறைந்து வருவதால் பூஸ்டர் தடுப்பூசி சில நாடுகளில் போட தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையிலும் சில நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இவை அனைத்தையும் மேற்கோள்காட்டி பயாலஜிக்கல்-இ நிறுவனம் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரத்திற்கு விண்ணப்பித்துள்ளது. மேலும் இந்த விண்ணப்பத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால் விரைவில் மூன்றாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.