காதல் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீழபொருவாய் கிராமத்தில் மலைகண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண்ணை காதலித்துள்ளார். இதனால் கர்ப்பமான அந்த பெண்ணிற்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி ராமராஜனுக்கு அந்த பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்தனர்.
இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ராமராஜ் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராமராஜனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.