அடுத்த வருடம் ஜப்பான் விண்வெளி வீரரான கொய்ச்சி வகடா ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் ஐந்தாவது முறையாக விண்வெளிக்கு பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த வருடம் ஜப்பான் விண்வெளி வீரரான கொய்ச்சி வகடா ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் ஐந்தாவது முறையாக விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். அடுத்த ஆண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஐந்தாவது விண்வெளி பயணமாக அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் “டிராகன்” விண்கலம் செல்ல உள்ளது. மேலும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் ஜப்பானிய விண்வெளி வீரர் கொய்ச்சி வகடா “டிராகன்” விண்கலத்தில் பயணிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த ஜப்பானிய விண்வெளி வீரருக்கு இதுவே ஐந்தாவது விண்வெளிப் பயணம் ஆகும். அதாவது அந்த விண்வெளி வீரர் அமெரிக்காவின் விண்கலத்தில் ஏற்கனவே 1996, 2000, 2009 உள்ளிட்ட ஆண்டுகளிலும், ரஷ்யாவின் விண்கலத்தில் 2013-ஆம் ஆண்டிலும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து வருகின்ற 2022-ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணிக்க உள்ளார். அதேபோல் விண்வெளிக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஐந்தாவது முறையாக அனுப்பும் விண்கலம் “டிராகன்” ஆகும். இதற்கிடையே வகடா விடுத்துள்ள அறிக்கையில் ஜப்பானிய விண்வெளி வீரர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக விண்வெளி செல்ல வாய்ப்பு அளிக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வகடாவுடன் சேர்ந்து ஜோஷ் கசடா, நிகோல் மேன் உள்ளிட்ட நாசா வீரர்களும் விண்வெளி பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.