Categories
அரசியல்

சசிகலா எங்கே போனா என்ன ? சாகும் வரை… எழுதி வச்சுக்கோங்க….!!

சசிகலா எங்கே போனால் எங்களுக்கென்ன என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வருகின்ற 16ஆம் தேதி திருமதி சசிகலா மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்துவதற்காக கூறியிருக்கிறார்கள், தொண்டர்களை சந்திக்க போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்று செய்தியாளர் முன்னாள் அமைச்சர் ஜயகுமாரிடம் கேட்டதற்கு,

அவர்கள் 2, 3 கருத்துக் கூறி இருக்கிறார்கள். ஒரு கருத்து புரட்சித்தலைவர்களுடைய தொண்டர்கள் எங்கேயும் போக மாட்டார்கள்.புரட்சித்தலைவர் இரத்தம் ஓடுகின்ற ஒரு தொண்டன், புரட்சித்தலைவி அம்மாவினுடைய ரத்தம் ஓடுகின்ற ஒரு தொண்டன் சாகும் வரை அவன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் இருப்பான், அவன் எங்கேயும் போகமாட்டேன்.

அதனால் இவர்கள் கிட்ட போகமாட்டான். இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.  இரண்டாவது சிறையில் இருந்து வந்தவர்கள், அப்ப ஏன் போகல அம்மாவுடைய நினைவிடத்திற்கு ? அப்ப போயிருக்கனுமே… அப்ப போகல,  ஆனா இப்போ அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக,  பொதுமக்களாலும், தொண்டர்களாலும் புறக்கணிக்கப்பட்டவர்கள் திடீர்னு வந்து நாங்க அங்க போற, இங்க போற என்று சொன்னால் எங்க போனாலும் போங்க உங்க பக்கம் யாரும் வர மாட்டாங்க என தெரிவித்தார்.

Categories

Tech |