Categories
உலக செய்திகள்

குழந்தையின் பாலினம் என்ன….? புலியை பயன்படுத்திய தம்பதிகள்…. வைரல் வீடியோவால் பரபரப்பு….!!

பிறக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய தம்பதிகள் புலியை பயன்படுத்திய வீடியோ கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

துபாயில் வசித்து வரும் தம்பதியினர் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தும் வகையில் விருந்து ஒன்றை கொடுத்தனர். இதற்காக அந்த தம்பதியினர் கடற்கரைப் பகுதியில் இரண்டு வண்ணப் பொடிகள் அடங்கிய பலூன்கள் சிலவற்றை கயிற்றில் கட்டி வானில் பறக்க விட்டனர். பின்னர் அந்த பலூனை பிடிக்கும் நிகழ்ச்சியில் நிஜ புலியை பயன்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கடற்கரை மணல் பகுதியில் நடந்து சென்ற அந்த புலி வானில் பறந்து கொண்டிருந்த பலூன்களில் ஒன்றை தாவி பிடித்தது.

https://youtu.be/6B8SG34lYik

அப்போது அந்த பலூன் வெடித்து இளஞ்சிவப்பு நிறத்தில் பொடி வெளியானது. இதன் மூலம் தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என அந்த தம்பதியினர் நம்புகின்றனர். மேலும் இந்த தம்பதியின் செயல் வனவிலங்கு பிரியர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் இது குறித்து கடும் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ஒரு நபர், “இது மிகவும் ஆபத்தமான செயல். வனவிலங்கை செல்ல பிராணிகளாக பயன்படுத்துதல் கூடாது” என்று பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் மற்றொரு நபர், “புலியை வைத்து இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதை பெருமையாக எண்ணக்கூடாது. இது மிகவும் தவறான செயலாகும்” என்றும் பதிவிட்டுள்ளார். இந்த செயலுக்கு பலரும் பல்வேறு விதமான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Categories

Tech |