கர்நாடக மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அக்டோபர் மாதம் 25ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று காவல்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் பள்ளிகள் சிறப்பு பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 2வது அலை கட்டுப்படுத்தும் வகையில் மாநிலவாரியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தற்போது பண்டிகை தினங்கள் வரவிருப்பதால் கட்டுப்பாடுகளில் அதிகக் கவனம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் கொரோனா 3 வது அலை வரும் என்ற அச்சம் இருப்பதால் மாநில அரசுகள் தளர்வு களுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீடித்து வருகிறது. இவ்வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வருகின்ற அக்டோபர் மாதம் 25ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக காவல்துறை கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தினமும் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
ஏற்கனவே அக்டோபர் 11ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேலும் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார். இதுபற்றி முதல்வர் பஸ்வராஜ் பொம்மை முடிவெடுப்பார் என்று அவர் கூறியுள்ளார். மேலும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொது இடங்களில் 4 நபர்கள் ஒன்று கூட அனுமதி வழங்கவில்லை.
மத்திய அரசு மாநில அரசுக்கு பண்டிகை தினங்களில் கட்டுப்பாடு வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளது. எனவே முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்ற வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.