நாளையத்தினம் வங்கக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகுமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று செய்த்தகியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறுகையில் , நேற்று வங்கக்கடலின்அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறக்கூடும். தற்போதைய நிலவரப்படி இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒரிசா மற்றும் மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மண்டபத்தில் 4 சென்டி மீட்டர் மழையும் , ஆலங்குடியில் 2 செண்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை :
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை 5 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியின் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும் , 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக் கடல் பகுதியில் வடக்கு கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.