குடிநீர் தொடர்பாக கனடாவின் நுணாவுட் பிராந்திய நிர்வாகமானது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நுணாவுட் பிராந்திய தலைநகரமான இக்காலூயிட் நகர மக்களுக்கு குடிநீர் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது இங்கு இருக்கக்கூடிய குடிநீரில் பெட்ரோலியம் ஹைட்ரோகார்பன்களின் சாத்தியம் இருப்பதாக கண்டறியபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நகர மக்கள் கண்டிப்பாக குழாய் தண்ணீரை குடிக்கவோ, சமைக்கவோ பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து இன்னொரு உத்தியோகப்பூர்வ தகவல் நகர நிர்வாகத்திடம் இருந்து வெளியாகும் வரை இந்த எச்சரிக்கை தொடரும் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் கொதிக்க வைத்த மற்றும் வடிகட்டப்பட்ட நீர் நுகர்வுக்கு பாதுகாப்பானது இல்லை என அறிவித்துள்ளனர். மேலும் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் குழாய் நீரை குளிக்க பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து துணி துவைப்பது, குளிப்பது போன்றவற்றிற்கு பெரியவர்கள் குழாய் நீரை பயன்படுத்தலாம். ஆனால் குளிக்கும் போது தண்ணீரை முழுங்க வேண்டாம். அதன்பின் குழாய் நீரில் எரிபொருள் வாசனை இருப்பதாக எழுந்த பரவலான புகாரை அடுத்து நகர நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. ஆகவே நகர மக்களின் தேவைக்கு ஏற்ப தண்ணீரை அதன் நிர்வாகமே விநியோகம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.