Categories
உலக செய்திகள்

சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை…. காரணம் என்ன தெரியுமா…??

 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த திங்கட்கிழமை உலகவங்கி சர்வதேச நிதியத்தின் ஆண்டு கூட்டம் மற்றும் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் – வங்கிகளின் தலைவர்கள் சந்திப்புக்காக அமெரிக்கா சென்றார். இந்நிலையில் அவர் சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களை பாஸ்டன் நகரில் சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவில் முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பாக உள்ள வாய்ப்புகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். மேலும் வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணம் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெல் நிறுவனத்தின் தலைவர் பிரகலாத் சிங்கிடம் எடுத்துரைத்தார்.

இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அரசு அளித்து வரும் சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார். மேலும் இந்தியாவில் சுகாதாரம் சாந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறினார். இதனை அடுத்து இந்த சந்திப்புக்கு பிறகு முன்னணி எண்ணெய் நிறுவனமான exxonmobil, மற்றும் தொலைதொடர்பு நிறுவனமான அமெரிக்கன் பவர் கார்ப்பரேஷன், நிதி நிறுவனமான பெயின் கேபிடல் போன்ற நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சூழல் மேலும் அதிகமாக இருப்பதாக தாங்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |