விஜய் டிவியில் ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று ரெடி ஸ்டெடி போ. இதுவரை இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் விரைவில் ரெடி ஸ்டெடி போ சீசன்-3 நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய ரியோ, ஆண்ட்ரூஸ் தான் மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆலியா மானசா, ரித்திகா உள்பட சீரியல் நடிகைகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.