கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஏற்கனவே பல அரசியல் தலைவர்களை பற்றி இழிவாக பேசிய துரைமுருகன் வழக்கில் உள்ளே சென்ற நிலையில் ஜாமினில் வெளிவந்தார். இதனையடுத்து அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைவர்கள் குறித்து சாட்டை துரைமுருகன் ஆவேசமாக பேசி அவதூறு பரப்பினார். இதனால் திமுக தொண்டர்கள் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து இதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை கொள்ளையடித்து கொண்டு செல்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தோம்.
இதில் சாட்டை துரைமுருகனை கைது செய்து இருக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். சாட்டை துரைமுருகன் சாட்டையை அடிக்கடி வீசிவிடுவதால் பலருக்கு வலிக்கிறது. அதனால் கைது செய்யப்பட்டுள்ளார். சாட்டை துரைமுருகனை கைது செய்யும் போலீஸ், ஹெச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.