Categories
உலக செய்திகள்

28 மாவட்டங்களில்…. உலா வரும் காட்டுப்பன்றிகள்…. பாதிக்கப்படும் நிலஉரிமையாளர்கள்….!!

கனடாவில் உள்ள  ஆல்பர்ட்டா மாகாணத்தில் அதிக அளவு காட்டுப்பன்றிகள் சுற்றி திரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கனடாவிலுள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில் தேசிய பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவானது எட்மண்டனுக்கு கிழக்கே எல்க் தீவில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் காட்டு பன்றிகள் அதிகம் நடமாடுவதாக கூறப்படுகிறது. பொதுவாக காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் இருக்கும் கிழங்கு மற்றும் முட்டைகளை தின்றுவிடும். இந்த நிலையில் பொதுமக்களுக்கு புகைப்படம் மற்றும் காணொளி பதிவு எடுப்பதற்காக அனுமதித்துள்ள நில உரிமையாளர்கள் காட்டுப்பன்றி மிகவும் சாதாரணமாக இப்பகுதியில் உலவுவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக 1990 ஆம் ஆண்டில் ஆல்பர்ட்டா மற்றும் Saskatchewan பண்ணையில் நிலங்களின் பயன்பாட்டிற்காக காட்டுப்பன்றிகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் தற்போது Saskatchewan பகுதியை சுற்றியுள்ள 296 கிராமங்களில் பாதிக்கும் மேற்பட்ட பகுதியில் காட்டுப்பன்றிகள் காணப்படுகின்றன. அதிலும் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள 28  மாவட்டங்களில் அதிக அளவில் காட்டுப்பன்றிகள் தென்படுகின்றன. மேலும் ஆண்டுதோறும் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக 2007 இல் அமெரிக்கா அரசு நடத்திய ஆய்வில் 2 மில்லியனுக்கும் அதிகமான சேதத்தை காட்டுப்பன்றிகள் ஏற்படுத்தியாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |