Categories
அரசியல் மாநில செய்திகள்

வரலாறு காணாத வன்முறை களியாட்டத்தால் திமுக வெற்றி…. இது புறவாசல் வெற்றி…. அறிக்கை வெளியிட்ட அதிமுக!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 77.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை இன்று முதல் நடைபெற்று வருகின்றது.

140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1381 ஒன்றிய குழு உறுப்பினர், 2901 ஊராட்சி தலைவர், 22,581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என 27 ஆயிரத்து 003 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. 28 மாவட்டங்களில் விடுபட்ட 789 பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.  தற்போது வரை திமுக கூட்டணியே முன்னிலை வகித்து வருகிறது.. அதிமுக பெரும் பின்னடைவில் இருக்கிறது.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.. அதில், அராஜகத்தின் அத்தியாயம் திராவிட முன்னேற்ற கழகம் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறையையும், ஜனநாயகம் காணாத அக்கிரமங்களையும் கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய வன்முறையையும் நடத்தி முடித்திருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்..

அறிக்கை இதோ :

Categories

Tech |