கோயம்புத்தூர் பாஜக அலுவலகத்தில் பெற்றோரை இழந்த இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக சிறுபான்மையினர் கட்சியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு நிதி உதவியினை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “திமுக மற்றும் கம்யூனிஸ்ட் உட்பட பல கட்சிகள் எங்களை கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான கட்சி என்று குற்றம் சாட்டி உள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் நாங்கள் அவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றோம். மேலும் விசிக தலைவர் தனது தொண்டர்களை எங்கு சென்றாலும் எங்களுக்கு எதிராக போராட தூண்டுகின்றார். முதலில் விசிக தலைவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை அக்கட்சி தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் அவர் இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் பாதுகாக்க வந்தவர் போல் ஒரு மாயையை உருவாக்கி, அவர்களை ரவுடிகள் ஆக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்” என்று கூறினார்.