அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், பேராசிரியர், நூலகர் உள்ளிட்ட 312 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E, B.Tech, Ph.D படித்து போதிய பணி அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 24 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அதன்படி https://aurecruitment.annauniv.edu என்ற இணையதள முகவரியில் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
அதன் பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு 27ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதில் எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.