சென்னையில் திரு.வி.க நகர் போதை பொருள் தடுப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணி புளியந்தோப்பு காவல் துறை துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தொடங்கி வைத்து பின்னர் அவரும் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம்.
அதுமட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் போதைபொருள் விற்கப்படுவதை கண்டறிந்தால் மாணவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். இதையடுத்து மெடிக்கல் ஷாப்களில் போதை மாத்திரைகளை விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று மருந்தகங்களில் விற்பனையாளருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மருந்துச் சீட்டு இல்லாமல் மாத்திரை விற்கக்கூடாது என்றும் குற்றவாளிகள் போதைக்காக சில மாத்திரைகளை அதிக விலைக்கு விற்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீறி விற்பனை செய்தால் மெடிக்கல் ஷாப்களில் உரிமத்தை ரத்து செய்யப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.