மகாராஷ்டிராவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. இதில் 145 இருந்த நிலையில் 160 இடங்களை கைப்பற்றிய சிவசேனா கூட்டணி கட்சி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவசேனாவான இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் இரு கட்சிகளும் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என பிடிவாதமாக இருந்தது.
இந்நிலையில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதலின் காரணமாக கட்சி இரண்டாக உடைந்தது. எனவே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து அரசை அமைத்தது. இதனை தொடர்ந்து தற்பொழுது தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நவி மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது, “மக்கள் யாரும் நான் முதலமைச்சர் அல்ல என்பதை ஒருபோதும் உணரவில்லை.
நான் கடந்த இரண்டரை வருடங்களாக மாநிலத்தின் முதல்வராக சுற்றி வந்ததால் தற்பொழுதும் அவ்வாறே உணர்கிறேன். மேலும் மக்களின் மீதுள்ள அன்பும் பாசமும் எனக்கு குறையவில்லை. நான் வீட்டில் சும்மா அமர்ந்து இருக்கவில்லை. தொடர்ந்து சேவை செய்து கொண்டிருக்கிறேன். மேலும் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பினும் நான் எனது பணியினை சிறப்பாக செயலாற்றி வருகிறேன்” என்று கூறினார்.