காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என சித்த ராமையா பரிந்துரை செய்துள்ளார்.
சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இல்லாததால் காங்கிரஸ் தலைவரின் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்றுக்கொண்டு விரைவில் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சரான சித்த ராமையா கடந்த திங்கட்கிழமை அன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்த ராமையா செய்தியாளர்களிடம் கூறியபோது “காங்கிரஸ் கமிட்டியினுடைய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என நான் பரிந்துரை செய்தேன். ஏனென்றால் சோனியா காந்திக்கு உடல்நிலை சீராக இல்லாததால் அவரால் பணியாற்ற முடியாது.
ஆகவே ராகுல் காந்தி உடனடியாக அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும். இதனையடுத்து கர்நாடகாவில் நிலக்கரி பற்றாக்குறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மாநிலத்தில் புதுப்பிக்க தகுந்த ஆற்றல் மூலம் தேவையான அளவு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதனால் நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக கர்நாடகம் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. அதுமட்டுமின்றி நாட்டில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கின்றது” என்று அவர் தெரிவித்துள்ளார்