ஆஞ்சிநேயருக்கு அணிவிக்கப்படும் வெள்ளிகவசம் பழுதடைந்த நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
நாமக்கல் மாவட்டத்தில் நகரின் ஒரு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சுமார் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இங்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது சாமி தரிசனம் செய்வது உண்டு. இதனையடுத்து அஞ்சிநேயர் ஜெயந்தி, அமாவசை, பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அப்போது ஆஞ்சநேயருக்கு தங்க கவசம், வெள்ளிக்கவசம், சந்தனகாப்பு, முத்தங்கி, வெண்ணை காப்பு உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்வது வழக்கம்.
இந்நிலையில் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படும் வெள்ளி கவசம் ஒரு சில இடங்களில் பழுதடைந்தும், ஒளி ம்ங்கியும் இருந்துள்ளது. எனவே இதனை சீரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்த நிலையில் நகை சரிபார்ப்பு உதவி ஆணையர் குமரேசன் மற்றும் கோவில் உதவி ஆணையர் ரமேஷ் ஆகியோரின் முன்னிலையில் நகை சீரமைக்கும் பணி நடந்துள்ளது. இந்த பணியில் சேலத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நகைத் தொழிலாளர்கள் வந்து சுவாமிக்கு அணிவிக்கப்படும் நகைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். மேலும் சீரமைப்பு பணிகள் விரைவில் முடிவடைந்து ஆயுத பூஜை அன்று புதுப்பிக்கப்பட்ட வெள்ளிக்கவசம் ஆஞ்சினேயருக்கு அணிவிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.